Friday, September 20, 2024

‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி உலகப் போர்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் தனி ஒருவன், ஆம்பள, வணக்கம் சென்னை, கதகளி, கவண், இமைக்கா நொடிகள், அரண்மனை போன்ற பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த பிடி சார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி கடைசி உலகப் போர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024