Friday, September 20, 2024

ஓநாய்களின் தலைவனைக்கூட தாக்கியிருக்கலாம்: பஹ்ரைச் வன அதிகாரி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

உத்தரப் பிரதேசத்தில் ஓநாய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அசாதாரணமானவை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில் சுற்றித் திரியும் ஓநாய்களால் நாளுக்குநாள் அச்சம் அதிகரிப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாள்களாகவே, பஹ்ரைச்சில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 15,000 மக்களை ஓநாய்கள் பயமுறுத்தி வருகின்றன.

இதுவரையில், 8 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 20 பேர் வரையில் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 165 பேருடைய பல குழுக்கள் 75 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓநாய்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மாநில அரசும் ஒன்பது துப்பாக்கி சுடும் வீரர்களை அனுப்பியுள்ளது.

மேலும், ஓநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன அதிகாரிகள் கூறுவதாவது, ஓநாய்களின் இந்த ஆக்ரோஷமான நடத்தை சாதாரணமானது அல்ல. ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில், ஓநாய்கள் இருப்பதாக, தகவலில் கூறப்படும் இடங்களுக்கு சென்றாலும், ஓநாய்கள் சிக்குவதில்லை.

ஓநாய்கள், வழக்கமாக இரையை கால்விரலில் இருந்து தாக்குகின்றன அல்லது காலின் பின்புறத்தில் ஒரு நரம்பை குறிவைத்து தாக்கும். ஆனால், பஹ்ரைச்சில் ஓநாயால் காயமடைந்த பெண் ஒருவர், தனது மூக்கின் ஒரு பகுதியைக் கடித்ததாகக் கூறினார்.

ஓநாய்கள் ஏன் திடீரென்று மனிதர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன? ஓநாய்கள் பொதுவாக பழிவாங்கும் போக்கைக் கொண்டிருக்கும்; அவை மிகவும் உணர்திறன் மிக்கவை.

உ.பி.யில் கட்டடம் இடிந்ததில் 8 பேர் பலி: விசாரணைக் குழு அமைப்பு!

ஓநாய்களில் ஒன்றின் கால் ஒடிந்து காயமடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுள்ளனர். அவர்களின் கணிப்புபடி, முன்னொரு காலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்த ஓநாயை, மனிதர்கள் காயப்படுத்தியிருக்கலாம். அந்த ஓநாய் ஆல்ஃபாவாகவும், கூட்டத்தின் தலைவனாகக் கூட இருக்கலாம்.

மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், தங்கள் குட்டிகளுக்கு மனிதர்கள் தீங்கு விளைவிப்பதைப் பார்த்த ஓநாய்கள் ஆக்ரோஷமாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஓநாய் பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கதவில்லா வீடுகளில், உள்ளூர் நிர்வாகம் கதவுகளையும் அமைத்து தருகிறது; இதுவரையில், 120 வீடுகளில் கதவுகள் அமைத்து தரப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி கூறுகிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான வீடுகள் இல்லாதவர்களுக்காகவும், அச்சுறுத்தல் இருப்பவர்களுக்காகவும் பஞ்சாயத்து இல்லத்தை தங்கிக் கொள்ளும் இடங்களாக மாற்றியமைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024