Monday, September 23, 2024

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பயணிக்கு குரங்கு அம்மை பாதிப்பு? சுகாதாரத்துறை விளக்கம்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை பாதிப்பு இந்தியாவிலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் மூலம் நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.இதனையடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுகாதார மையம் அமைத்து சோதனை நடத்துவது, நாடு முழுவதும் ஆய்வகங்களைத் தயாா்படுத்துவது, பாதிப்பைக் கையாளும் வகையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோா், உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் நலம் பெறுவா். இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள நபரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024