Monday, September 23, 2024

நிலவில் அணுமின் நிலையம்! ரஷிய திட்டத்தில் இணையும் சீனா, இந்தியா?

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் இணைய சீனாவும், இந்தியாவும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

நிலவில் அணுமின் நிலையம்

நிலவின் மேற்பரப்பில் 2035ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு ரஷிய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், 2033 முதல் 2035-க்குள் இந்த திட்டம் முடிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ரஷியா, சீனாவுடன் இணையும் இந்தியா

இந்த நிலையில், கிழக்கு பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அணுசக்தி கழகமான ரோசாட்டத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ், ரஷியாவின் விண்வெளி அணுமின் திட்டத்தில் இணைய இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அவர் பேசியதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

“அரை மெகாவாட் ஆற்றல் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை நிலவில் அமைக்கவுள்ளோம். இந்த திட்டத்தில் சர்வதேச நாடுகளும் ஈடுபாடு காட்டியுள்ளனர். நமது சீனா மற்றும் இந்திய நண்பர்கள், இதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் பல சர்வதேச திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

அணுமின் நிலையத்தில் முக்கியத்துவம்

வரும் காலங்களில் நிலவில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்துவதற்கு அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது நம்பகத்தன்மையை அதிகரிப்பதுடன் தடையில்லாத நிலையான ஆற்றலையும் வழங்குகிறது.

குறிப்பாக, நிலவில் ஏற்படும் 14 இரவு நாள்களை அணுமின் நிலையம் மூலம் எளிதில் சமாளிக்க முடியும். நிலவில் மனிதர்கள் குடியேற்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

நீண்ட காலமாக நாசாவும் நிலவு குடியேற்ரங்களுக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்க விண்வெளி நிறுவனங்களும் அணுசக்தி பயன்படுத்துவதற்கான நன்மைகளை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க திட்டத்திலும் இந்தியா

நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வீரர் சுபான்சு சுக்லாவை அனுப்பவுள்ளதாக இஸ்ரோ கடந்த மாதம் அறிவித்திருந்தது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட சபான்சு சுக்லா, முன்னதாகவே, நாசாவின் உதவியுடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024