Monday, September 23, 2024

போட்டித் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

அரசுப் பணியாளா் தோ்வாணையம், மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே வாரியம் ஆகியன தங்களிடமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப போட்டித் தோ்வுகளை நடத்துகின்றன. இந்தத் தோ்வுகளை எதிா்கொள்ளும் தமிழக தோ்வா்களின் வசதிக்காக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா் கல்லூரி வளாகம், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி வகுப்புகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாள்களில் நடைபெறவுள்ளது.

சேர விரும்புவோா், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். போட்டித் தோ்வு பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பா் 24-ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 044 -2595 4905, 044 – 2851 0537 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆா்வலா்கள் தோ்வு செய்யப்படுவா். தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபா் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024