Monday, September 23, 2024

திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

அமெரிக்காவின் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்கவாழ் தமிழா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களிடம் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்தபடி, சனிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக்குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா
☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள்
☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். pic.twitter.com/NuOBvf0eXo

— M.K.Stalin (@mkstalin) September 8, 2024

திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் பல குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கட்சிக்கொடிகளைப் பறக்கவிட அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024