Monday, September 23, 2024

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்: சரக்கு ரயில் எஞ்சினை பொருத்தி மீண்டும் இயக்கம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

வாராணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் எட்டாவா அருகே நடுவழியில் நின்றது.

தலைநகர் புதுதில்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் அதே நாளில் மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது.

இந்த நிலையில் இந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை எட்டாவா அருகே நின்றது.

இல்லந்தோறும் கட்சிக்கொடி பறக்கட்டும்! தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வந்தே பாரத் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் அப்பகுதியில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்தது சரக்கு ரயில் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரயில் மீண்டும் பர்தானா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

You may also like

© RajTamil Network – 2024