Monday, September 23, 2024

ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி! தற்காலிகமாக ஒத்திவைப்பு!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ரூ. 2,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கும் நடைமுறையை அமல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

54-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம் குறித்து கேள்வி? புள்ளியியல் குழுவைக் கலைத்தது மத்திய அரசு!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரி

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது.

இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்

காப்பீடுகளுக்கு வரி

மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் வரியை விலக்குவது குறித்து கூட்டத்தில் மத்திய அமைச்சகத்திடம் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்ட நிலையில், எந்த முடிவும் எட்டவில்லை என்று உத்தரகண்ட் நிதியமைச்சர் பிரேம் சந்த் அகர்வால் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024