Monday, September 23, 2024

உ.பி. போலீஸாருக்கு சட்டம் – ஒழுங்கு கேலியாக மாறியுள்ளது: பிரியங்கா

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

உத்தரப் பிரதேச காவல்துறைக்குச் சட்டம் ஒழுங்கு கேலியாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்காவின் முகநூல் பதிவில்,

ரேபரேலியில் பொது வசதி மைய நடத்துநர் ரவி சௌராசியாவிடம் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணப்பையைக் கொள்ளையடித்துத் தப்பியோடினர்.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மீதான ஜிஎஸ்டியை எதிர்ப்போம்: அதிஷி

ஆனால் கொள்ளையர்கள் என்ன நினைத்தார்களோ பணப்பையைச் சாலையோரம் வைத்துவிட்டு ஓடிவிட்டனர். அந்த வழியாக வந்த கூலித்தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றபோது, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ’போராட்டத்தையடுத்து வேறு காவல் நிலையத்தில் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் தொழிலாளி தீபு நல்ல குடிமகனாகத் தனது கடமையைச் செய்துள்ளார், ஆனால் போலீஸார் அவரைக் குற்றவாளியாக்கியது.

இன்று கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கிராம மக்களின் போராட்டத்தையடுத்தும், போதிய ஆதாரம் இல்லாததாலும் தொழிலாளி தீபுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அப்பாவிகளைச் சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் உத்தரப் பிரதேச நிர்வாகத்தின் அடிப்படை மந்திரமாகிவிட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024