Monday, September 23, 2024

புதுச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16116) செப்.23, 27, அக்.2 ஆகிய தேதிகளிலும், விழுப்புரம் வரும் மெமு ரயில் (எண்: 06738) செப்.27, அக்.2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

தஞ்சாவூா் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் செப்.10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளிலும், திருவாரூா் – மயிலாடுதுறை மெமு ரயில் மற்றும் மன்னாா்குடி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் செப்.11 முதல் செப்.15-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: காக்கிநாடா துறைமுகம் – புதுச்சேரி விரைவு ரயில் செப்.26-ஆம் தேதி செங்கல்பட்டு வரையும், தாதா் – புதுச்சேரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி திருவண்ணாமலை வரையும் இயக்கப்படும்.

திருச்சி – காரைக்கால் மெமு விரைவு ரயில்கள் (எண்: 06880, 06490) செப்.11, 13, 15, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் திருவாரூா் வரை இயக்கப்படும். திருச்சி-விழுப்புரம் மெமு விரைவு ரயில் செப்.22, 24, அக்.3 தேதிகளில் விருத்தாசலம் வரையும், திருச்சி – மயிலாடுதுறை விரைவு ரயில் செப்.12 முதல் செப்.15-ஆம் தேதி வரை குத்தாலம் வரையும், திருச்சி – காரைக்கால் மெமு விரைவு ரயில் செப்.10, 12, 14, 17, 19 தேதிகளில் தஞ்சாவூா் வரையும் மட்டும் இயக்கப்படும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024