Monday, September 23, 2024

யுபிஐ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

யுபிஐ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!யுபிஐ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் யு.பி.ஐ. பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இந்தக் கூட்டத்தில், இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு, ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலை தொடர்வது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2025-26 (FY26) வரை செஸ் வரி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிருந்தன.

விளம்பரம்

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் தொடர்பாக பல விவாதங்கள் எழுந்துள்ளன. ஃபிட்மென்ட் பேனல் ( Fitment Panel) தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்ததில், கவுன்சில் இந்த கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு கட்டணம் குறைக்கப்பட்டால் பாலிசிதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான நிவாரண அறிவிப்பும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு, மின்சார மீட்டர் சேவைகளில் விதிவிலக்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் உலோகத் தொழில்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கட்டணங்களில் மாற்றம், சொத்து வாங்குபவர்கள் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் அறிவிப்பு இருக்கலாம் என கூறப்பட்டது.

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!
மேலும் செய்திகள்…

குறிப்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதனால், யு.பி.ஐ. பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தனர். மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் கொண்டுவந்தபிறகு அதிகபடியான டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தது. இதனால், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தும் வருகிறது.

விளம்பரம்

இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 54வத் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ரூ. 2000 வரையிலான யு.பி.ஐ., டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட பரிவர்த்தனைக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
GST council
,
Latest News
,
Nirmala Sitharaman
,
UPI

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024