Monday, September 23, 2024

ரூ.9.2 கோடி மதிப்புடைய அதிர்ஷ்ட கல்லை வீட்டு வாசப்படியாக பயன்படுத்திய மூதாட்டி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ருமேனியா,

தென்கிழக்கு ருமேனியா, கோல்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது வீடு தரை தளத்தில் இருந்து சற்று உயரமாக இருந்துள்ளது.

இந்நிலையில், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஓடைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு (அதிர்ஷ்ட) கல்லை கண்டுள்ளார். அதனைத் தூக்கிவந்து தனது வீட்டின் வாசப்படியில் போட்டு தினமும் வீட்டிற்குள் சென்று வர அதனை பயன்படுத்தி வந்துள்ளார்.

அந்த மூதாட்டி அதன்பின் 90களின் முற்பகுதியில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்கு அவரின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, இது சாதாரண கல் போல் இல்லையே என கவனித்ததில் அதில் இருந்து சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார். அப்போது, அது 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அம்பர் கல் என்பது தெரியவந்துள்ளது.

பிறகு இதுகுறித்து ருமேனிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்கள் அந்த கல்லை எடுத்து சென்றுள்ளனர். அந்தக் கல்லின் எடை 3.5 கிலோ. இதன் மதிப்பு 1.1 மில்லியன்( இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய்). தற்போது அந்தக் கல் கர்கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024