Saturday, September 21, 2024

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியது இல்லை… – வருகிறது புதிய முறை!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

இனி சுங்கச்சாவடிகள் கிடையாது… ஆனால் சுங்கக் கட்டணம் உண்டு : மத்திய அரசின் புதிய முயற்சி!மாதிரி படம்

மாதிரி படம்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதற்காக 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளில் செவ்வாய்க்கிழமையன்று சில மாற்றங்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செய்துள்ளது. குறிப்பாக செயற்கைக்கோள் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்கவரியை வசூலிக்கலாம் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், அதாவது ஜிபிஎஸ்ஸின் ஆன்-போர்டு யூனிட்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விளம்பரம்

ஜிபிஎஸ் உதவியுடன் தாங்கள் பயணிக்கும் தூரத்துக்கு ஆன்லைன் மூலமாகவே வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை செலுத்திக் கொள்ள முடியும். இத்தகைய வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைக்கும் வகையிலும், சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Also Read |
புலம்பெயர்ந்தோர் நலன் முதல் கருக்கலைப்பு சட்டம் வரை… ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் காரசார விவாதம்

அதன்படி ஜிபிஎஸ்ஸின் ஆன்-போர்டு யூனிட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 20 கிலோ மீட்டர் வரை கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

விளம்பரம்

தானாக நம்பர் ப்ளேட்டை பரிசோதிக்கும் தொழில்நுட்பம், பாஸ்ட் டேக் கட்டண வசதி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சுங்கவரி வசூலிப்பதை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
fees
,
Highways Department
,
Toll gate

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024