Friday, September 20, 2024

விவேகானந்தர் சிகாகோ உரை நிகழ்த்திய நாள் இன்று: நினைவுகூர்ந்த பிரதமர்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை பல தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

சமயத் துறவியாக இருந்தாலும், உலகின் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவராகவும், பலரையும் பேச்சினால் தன்பால் கவர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரின் பெயரைச் சொன்னாலே பலரது நினைவுக்கு வருவது அவரது சிகாகோ உரை தான். உலகின் கவனத்தை ஈர்த்த அந்த உரையை விவேகானந்தர் இதே நாளன்று தான் நிகழ்த்தினார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரின் நடைபெற்ற உலகச்சமய மாநாட்டில் அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே என ஆரம்பித்து தனது உரையை தொடங்கினார். அவருக்கு அப்போது வயது 30.

பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம்

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

131 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11,1893 அன்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் நடைபெற்ற உலகச்சமய மாநாட்டில் தனது உரையை நிகழ்த்தினார். அவரது வார்த்தைகள் இந்தியாவின் வளமான ஆன்மிக பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

வரலாற்று சாதனை! 91-ஆவது ஆண்டில் “தினமணி’

சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் எதிர்க்கால தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து ஒற்றுமை நல்லிணக்கத்தின் சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது.

சிகாகோவில் சுவாமி விவேகானந்தரின் உரையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார், அத்துடன் பேலூர் மடத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கான இணைப்பையும் அவர் இணைத்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024