ஆப்கன் – நியூஸி. டெஸ்ட் கிரிக்கெட்: இன்றும் ஆட்டம் இல்லை!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

தொடர்ந்து மூன்றாவது நாளிலும் ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கைவிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் 3-ஆவது நாள் ஆட்டமும் புதன்கிழமையில் பெய்த பலத்த மழையால், ஆட்டம் கைவிடப்பட்டது. வானிலை தெளிவாக இருந்தால், நாளை முதல் 98 ஓவர்களுடன் போட்டி தொடங்கும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே முதல் நாள் ஆட்டமும் இதே முடிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்டத்துக்கும் மைதானம் உகந்ததாக இல்லாமல் போக, ஒரு பந்து கூட வீசப்படாமல் போனது. நாள் முழுவதும் மழை பொழியாத நிலையில், திங்கள்கிழமை மாலை 1 மணி நேரம் மழை பெய்தது.

ஜார்கண்ட்: கருப்பையில் இறந்த குழந்தையை அகற்ற அலட்சியம் காட்டிய மருத்துவமனை

2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மழைப் பொழிவு இல்லாதபோதும், மைதானத்தின் ஈரப்பதத்தை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது.

ஒரு சா்வதேச ஆட்டத்தை நடத்துவதற்கு உகந்த வகையிலான வசதிகளை ஏற்பாடு செய்யாமல் இருந்ததற்காக கிரேட்டா் நொய்டா ஆணையம் பலத்த விமா்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த மைதானத்தில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் இருந்ததாலேயே அதை தோ்வு செய்ததாகவும், தொடா் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024