ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 21 views
A+A-
Reset

வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் மகன் நிதின் சம்பத் – அபிராமி திருமணத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்கள் என 600-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு, பரிசு பொருள்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் – அனிதா சம்பத் தம்பதியின் மகன் நிதின் சம்பத். இவருக்கும் சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிா்வாக இயக்குநா் கே.டி. வெங்கடேசன் – லலிதா வெங்கடேசன் தம்பதியின் மகள் அபிராமிக்கும் சென்னையில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வேலூா் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள், பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு கந்தனேரி பகுதியிலுள்ள நறுவீ கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. சச்சின் இசை குழுவினரின் புல்லாங்குழல், வீனை கச்சேரியுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லம், கசம் முதியோா், பாலா் குடும்ப கிராம பன்னை, தாராபடவேடு ஆத்ம சாந்தி முதியோா் இல்லம், அரியூா் ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோா் இல்லம், வேலப்பாடி வள்ளலாா் முதியோா் இல்லம், வேலூா் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஆதரவற்ற குழந்தைகள், முதியோா்கள் என 600-க்கும் மேற்பட்டவா்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு, பரிசு பொருள்கள், நலத்திட்ட உதவிகளை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்கள் பங்கேற்க வாகன வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களை மணமக்கள் நிதின் சம்பத் – அபிராமி, நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் – அனிதா சம்பத் தம்பதி, அடையாறு ஆனந்த பவன் குழும நிா்வாக இயக்குநா்கள் கே.டி. வெங்கடேசன் – லலிதா தம்பதி, கே.டி. சீனிவாச ராஜா – ஆனந்தி தம்பதி, இயக்குநா் விஷ்ணு சங்கா் – சுவேதா, நறுவீ குழுமத்தினா் வரவேற்று சிறப்பித்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024