Friday, September 20, 2024

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது.அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.கன்னியாகுமரி-பெங்களூரு, தூத்துக்குடி-மைசூரு, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16525, 16235, 12657) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.

அதே போல, பெங்களூரு-கன்னியாகுமரி, மைசூரு-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022), சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16021) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் நிற்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024