தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் 17 நாள்களாக சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ள தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தைகள் மேற்கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? வைரலாகும் விடியோ! நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு

சென்னை அருகே மூடப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Had a very engaging discussion with the team from @Ford Motors! Explored the feasibility of renewing Ford’s three decade partnership with Tamil Nadu, to again make in Tamil Nadu for the world!@TRBRajaa@Guidance_TN@TNIndMin#InvestInTN#ThriveInTN#LeadWithTN#DravidianModelpic.twitter.com/J2SbFUs8vv

— M.K.Stalin (@mkstalin) September 11, 2024

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகி கே ஹார்ட் வெளியிட்ட செய்தியில், சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி கோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கினால், தமிழகத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024