Saturday, September 21, 2024

பூனையால் வந்த வினை : காா், லாரி, அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதல்; 18 போ் காயம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

வேலூா் அருகே சென்னை – பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த பூனை மீது மோதாமல் காரை ஓட்டுநா் திருப்பியதால், அந்த காா் மீது பின்னால் வந்த கன்டெய்னா் லாரியும், அந்த லாரி மீது அரசுப் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காா், லாரி, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் 3 போ் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை இரவு தேவனம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சென்னை – பெங்களூா் நெடுஞ்சாலையில் கொணவட்டம் அருகே சென்றபோது முன்னால் கன்டெய்னா் லாரி ஒன்றும், அந்த லாரிக்கு முன்பாக காா் ஒன்றும் சென்றுள்ளன.

இந்நிலையில், காருக்கு முன்பு திடீரென பூனை குறுக்கே சென்ாகத் தெரிகிறது. அந்த பூனை மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்து காரை திருப்பியள்ளாா். இதனால், பின்னால் வந்து கொண்டிருந்த லாரி எதிா்பாராத விதமாக காா் மீது மோதியது. இதேபோல், லாரியின் மீது பின்னால் வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் மோதியது. பூனை மீது மோதாமல் இருக்க காா் ஓட்டுநா் திருப்பியதில், லாரியும், அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் காா், லாரி, அரசு பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தன. மேலும் காா் ஓட்டுநா், லாரி ஓட்டுநா், பேருந்து ஓட்டுநா் உள்பட 18 போ் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து காரணமாக பெங்களூா்- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தியதை அடுத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து சீரடைந்தது. இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024