10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: நாளை ஆட்தேர்வு நடத்தும் இஸ்ரேல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புனே,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பதாகவும் எண்ணற்ற கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தரைமட்டமான பகுதிகளில் மீண்டும் கட்டடங்களை எழுப்பும் பணியில் இஸ்ரேல் முயன்று வரும் நிலையில், போதிய ஆட்கள் இல்லாமல் தவித்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாட்டில் வேலைபார்த்துவந்த பாலஸ்தீனர்களின் பணி அனுமதியை அந்த நாடு ரத்து செய்ததாலும், போர் பதற்றத்தினாலும் அந்நாட்டு வேலைக்காகப் பயணிப்போரின் வருகையும் குறைந்துள்ளது. மதிப்பீடுகளின்படி, இஸ்ரேலுக்கு சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் கட்டுமான துறையில் 10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஆட்தேர்வு நாளை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறுகிறது. முன்னதாக கட்டுமானத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்யப்போவதாக இஸ்ரேல் அறிவித்து இருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சான்றிதழ்களை வைத்திருக்கும் மற்றும் குறைந்தபட்சம் 990 மணிநேர வேலையில் பயிற்சியுடன் பராமரிப்புப் படிப்பை முடித்த 5 ஆயிரம் பராமரிப்பாளர்களை இஸ்ரேல் இந்தியாவிலிருந்து கோரியுள்ளது. ஆட்களை தேர்வு செய்யும் பணியை பார்வையிட அடுத்த வாரம் இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் இந்தியா வர உள்ளனர். இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024