Sunday, October 27, 2024

பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: 600 ஹெக்டேர் தீக்கிரை

by rajtamil
Published: Updated: 0 comment 35 views
A+A-
Reset

தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி உள்ள காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

பாரீஸ்,

தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதி உள்ளது. கரடு முரடான மலை குன்றுகளுடன் கூடிய இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பிடித்தது.

காற்று வீச்சு காரணமாக கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி உள்ள காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். காட்டுத்தீ பரவல் காரணமாக அங்கு இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024