மலப்புரத்தில் நிபா வைரஸுக்கு 2வது நபர் பலி: தடை உத்தரவு, திரையரங்குகள் மூடல்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த இரண்டாம் நபர் பலியான நிலையில், பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டன. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்த இரண்டாம் நபர் பலியான நிலையில், நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே செப்டம்பர் 9ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கேரளம் திரும்பிய நபர் நிபா வைரஸ் பாதித்து பலியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை, 24 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகியிருக்கிறார்.

இதையடுத்து, மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பொதுவிடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர பணிகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ன. அதாவது, தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-மெயில் வைத்திருப்பவரா? கூகுள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை

கூடுதலாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசியமாக இருந்தால், குறைந்த எண்ணிக்கையில் கூடுவதற்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் உத்தர்விடப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக மருத்துவமனையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலங்கு அல்லது பறவை கடித்த பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை சமைக்கும் முன்பு நன்கு சுத்தப்படுத்தப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உயிரிழந்த
கேரள இளைஞருக்கு நிபா தொற்று

கடந்த சில வாரத்துக்கு முன், பெங்களூரிலிருந்து சொந்த ஊரான மலப்புரம் மாவட்டத்துக்கு திரும்பிய அந்த இளைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வீட்டின் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இவருக்கு நிபா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு இவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு நிபா தொற்று இருந்தது தெரிய வந்தது. அவருடன்நெருங்கிய தொடா்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அவா்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024