Saturday, October 26, 2024

பி.எட். சோ்க்கை: இணைய வழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் இணைய வழியில் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில், இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பான பி.எட். படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் www.tngasa.in திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இதில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் செப்.26 வரை சோ்க்கைக்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை போன்ற கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணத்தை, விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம். மேலும், இது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், 044-24343106, 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024