Friday, September 20, 2024

பாடகர் மனோ மகன்கள் விவகாரம்: தாக்கப்பட்டது யார்?- புதிய சிசிடிவி வெளியீடு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சென்னை,

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ, சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 10ந்தேதி இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த மனோவின் மகன்கள், எதற்காக எங்களது வீட்டை நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள்? என்று கேட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ்(வயது 16) மற்றும் கிருபாகரன்(20) ஆகியோரை பிடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் ரித்தீஷ், கிருபாகரன் இருவரையும் அவர்கள் முட்டிப்போட வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை எதிர்தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீசார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயது சிறுவன் உள்பட 8 பேர் சேர்ந்து கல், கட்டையால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024