பெரியார் என்ற சொல்லே பாஜகவுக்கு பிடிக்காது: திருமாவளவன்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பெரியார் என்ற சொல்லே பாஜகவுக்கு பிடிக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை ஒட்டி சென்னை ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன், அதைப் பாராட்டி சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன், சமூக நீதிப் பார்வையோடு விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது.

பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல, சமூக நீதி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது, சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது, அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்.

பெரியார் என்ற சொல்லே பாஜகவுக்கு பிடிக்காது, சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர் ஆளுநர் ரவி, அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது.

இஸ்ரேலின் வெறியாட்டம்! பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் லெபனான் குற்றச்சாட்டு

பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை, தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது, இப்போதே தேர்தல் கணக்கு, கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள், கூச்சல் எழுப்பினார்கள், எப்படியாவது கூட்டணியில் விரிசல் ஏற்படாதா எதிர்பார்த்து இருந்தார்கள், ஆனால் ஏமாந்து போனார்கள்.

விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டுக் கொள்கையில் பயணிக்கிறது, முரண்பாடான அரசியல்தான், ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவுயில் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.

திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது, விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம், திமுகவுக்கு அதில் உடன்பாடு உள்ளது, அன்றே அண்ணா அந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024