Friday, September 20, 2024

ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 11 மணி நிலவரம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்!

காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவான நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாவட்டவாரியாக, அனந்த்நாக்-25.55%, தோடா – 32.30%, கிஷ்த்வார்-32.69%, குல்காம்-25.95%, புல்வாமா-20.37%, சஞ்சீவி-31.25% ஷோபியான்-25.96% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

‘ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்’- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024