‘ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்’- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஜம்மு- காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு அங்கு நடைபெறுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல். ஜம்மு-காஷ்மீரை அவமதிக்கும் செயல்.

ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவு!

இந்தியாவுக்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும், வேலைவாய்ப்புகளை கொண்டுவரும், பெண்களை வலிமையாக்கும், அநீதியான உலகத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவரும், ஜம்மு- காஷ்மீரை செழிப்பாக மாற்றும்.

எனவே, நீங்கள் அனைவரும் வெளியே வந்து உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

जम्मू-कश्मीर के मेरे भाइयों और बहनों, आज प्रदेश में पहले चरण के मतदान हो रहे हैं।
देश के इतिहास में पहली बार किसी राज्य का statehood छीन कर उसे केंद्र शासित बनाया गया है – ये आप सभी के संवैधानिक अधिकारों का हनन है, जम्मू-कश्मीर का अपमान है।
INDIA को दिया आपका एक-एक वोट
– आपके…

— Rahul Gandhi (@RahulGandhi) September 18, 2024

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல் கட்டத் தேர்தல்

ஜம்மு – காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024