ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவு!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

24 தொகுதிகளில் வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் உள்ளனா். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள். 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

இதில் 1.23 லட்சம் போ் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வாக்காளா்கள் ஆவா். எனவே, வெற்றியை உறுதி செய்வதில் இளைய தலைமுறையினா் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 302 வாக்குச் சாவடிகள் நகா்புறங்களிலும் 2,974 வாக்குச் சாவடிகள் கிராமப் பகுதிகளிலும் உள்ளன.

டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்

மூன்று கட்டத் தேர்தல்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024