பிரிவினைவாதம், வேலையின்மைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: அமித் ஷா!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

பிரிவினைவாதம், வேலையின்மைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பிரிவினைவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதிகொண்டுள்ள அரசை அமைக்க ஜம்மு-காஷ்மீர் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

இதுகுறித்து அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ வலுவான அரசால் மட்டுமே பயங்கரவாதமில்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க முடியும். அப்போது தான் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து வளர்ச்சிப் பணி விரைவுபடுத்த முடியும்.

இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பிரிவினைவாதம் மற்றும் குடும்ப அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதிகொண்டுள்ள அரசை அமைக்க ஜம்மு-காஷ்மீர் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

சட்டப்பேரவைத் தேர்தல்

2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது,

7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் முதல் கட்டமாக தேர்தல் நடைப்பெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

வேட்பாளர்கள்

முதல் கட்டமாக 24 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் 90 சுயேச்சைகள் உள்பட 219 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

2-வது மற்றும் 3-வது கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024