ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: 5 மணிவரை 58.19% வாக்குப்பதிவு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அறிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிற்பகல் வரை 41 சதவீத வாக்குகள் பதிவாகின.

தற்போது மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024