குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

குழந்தை வளர்ப்பு என்பது இந்த காலகட்டத்தில் அவ்வளவு சாதாரணமானது அல்ல. அதிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் மிகவும் கடினம்தான்.

குழந்தை வளர்ப்பில் மிகவும் சவாலான ஒரு விஷயம் குழந்தையை சாப்பிடவைப்பதுதான். குழந்தையின் 6 மாதம் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை உணவின் மூலமாக கொடுத்தே ஆக வேண்டும்.

விவரம் தெரியாத வயதில் கூட குழந்தையை எப்படியாவது சாப்பிட வைத்துவிடலாம்.

ஆனால், ஓரளவு விவரம் தெரிந்துவிட்டால் குழந்தைகள் என்ன உணவை கேட்கிறார்களோ அதைத் தான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதற்கு ஆரம்பம் முதலே குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்ததை கொடுப்பதுதான் காரணம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே, குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பழக்கத்தை அம்மாக்கள் நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் குழந்தை தானாக சாப்பிட ஆரம்பிக்கும். குழந்தை ஒரு பொருளை எடுக்க பழகிய பின்னர் சாப்பிடவும் வைக்க பழக வேண்டும்.

அப்போதுதான் தனக்குத் தேவையான உணவின் அளவை குழந்தை உணர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும். குழந்தையின் தன்னம்பிக்கையும் வளரும்.

குழந்தைப் பருவம் முதலே அனைத்து வகையான உணவுகளையும் கொடுத்து பழக வேண்டும்.

குழந்தைகளின் தினசரி உணவில் நார்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சமைத்துத் தர வேண்டும். உதாரணமாக அவரைக்காய் பொறியல், கொத்தவரங்காய் , வாழைத்தண்டு கூட்டு போன்றவற்றினை குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது கொடுத்தனுப்புவது நல்லது.

நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களையும் குழந்தையை சாப்பிடவைத்து பழக்குங்கள்.

முதலில் இந்த சுவை குழந்தைகளுக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பிடித்த மாதிரி சமைத்துக் கொடுப்பதுதான் சவால்.

அதேபோல் குழந்தைகள் பீட்சா பர்கர் தான் அடிக்கடி வேண்டும் என அடம்பிடித்தால் உடனே வாங்கி தந்துவிட வேண்டாம். குழந்தைகளின் அடம் பிடித்து வாங்க முற்பட்டாலும் பெற்றோர் உறுதியாக இருந்தால் தப்பித்து விடலாம்.

இல்லையெனில் பிற்காலத்தில் அந்த குழந்தையை எதற்கும் அடம் பிடித்தால் உடனே கிடைத்துவிடும் என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிடும்.

உணவின் அவசியத்தையும் உணவை வீணாக்கக் கூடாது என்பதையும் எந்த பொருளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதையும் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்தே குழந்தையை கட்டுபாட்டில் வைத்திருந்தால் மட்டுமே முடியும். இதற்கு பெற்றோர் நிச்சயம் நேரம் ஒதுக்க வேண்டும்.

அனைத்து விஷயங்களையும் பொறுமையாக எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக குழந்தை புரிந்துகொள்ளும். நீங்கள் சொல்வதை கேட்கும்விதத்தில் குழந்தையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்கள் தனியே சாப்பிட பழக்கம் வைக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024