அசத்தும் இளம் வங்கதேச வீரர் ஹசன் மஹ்முத்தின் வரலாறு!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இளம் வங்கதேச வீரர் கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ரோஹித், கோலி, கில், ரிஷப் பந்த் என முக்கியமான வீரர்களை வீழ்த்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்ப்யினஷிப் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் வங்கதேசம் அணிக்கு இந்த வெற்றி முக்கியமாகப்படுகிறது.

இந்திய அணி 48 ஓவர் முடிவில்176/6 ரன்கள் எடுத்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: சீனாவை வீழ்த்திய இந்திய அணி முதலிடம் தக்கவைப்பு!

கிரிக்கெட் பயணம்:

வங்கதேசத்தில் லக்‌ஷ்மிபுரில் 1999இல் பிறந்தவர் ஹசன் மஹ்முத். தனது முதல் சர்வதேச கிரிக்கெட்டினை மார்ச் 2020இல் வங்கதேச அணிக்காக விளையாடுகிறார்.

  • 2017-2018இல் முதல்தர கிரிக்கெட்டில் சேர்ந்தார்.

  • 2018இல் யு-19 உலகக் கோப்பையில் இடம்பிடித்தார்.

  • 2019இல் வங்கதேச பிரீமியர் லீக்கில் சேர்ந்தார்.

  • 2019இல் ஏசிசி வளர்ந்துவரும் ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்தார். இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  • 2020இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சர்வதேச டி20 அணியில் இடம் பிடித்தார்.

  • 2020இல் அடுத்த மாதமே டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்தார்.

  • ஜனவரி 2021இல் மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்தார்.

ரிஷப் பந்த் விக்கெட்டினை வீழ்த்திய மகிழ்ச்சியில் …

இலங்கை வீரர் மீது கடுமையான நடவடிக்கை: 20 ஆண்டுகள் பயிற்சி நடத்த தடை!

பந்து வீச்சு விவரம்

18 டி20யில் 18 விக்கெட்டுகளும் 22 ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்டுகளும் 3 டெஸ்ட்டில் 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

பிபிஎல் தொடரில் 40 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தின் பயிற்சியாளர் இவரது வேகம், துல்லியமான பந்துவீச்சினை பாராட்டியுள்ளார். வங்கதேசத்தின் வருங்கால வேகப் பந்து வீச்சாளர் என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024