சதி திட்டம் கசிவு.. முன்கூட்டியே பேஜர்களை வெடிக்க வைத்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை செவ்வாயன்று மதியம் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஈரானிய அமைப்பு, இந்த சதித் திட்டம் குறித்து கண்டுபிடித்ததால், திட்டமிட்டதைவிட முன்கூட்டியே பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இந்த தாக்குதல் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அனுமதி கொடுத்திருக்கலாம் என்றும், நியூ யார்க் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

ஏஆர்-924 என்ற வகை பேஜர்கள்தான் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. இது தைவான் நிறுவமான கோல்டு அப்பல்லோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.

செவ்வாயன்று ஒரே நேரத்தில் பேஜா்கள் வெடித்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனைத்தொடா்ந்து புதன்கிழமை லெபனானில் வாக்கி டாக்கிகள் வெடித்து 9 போ் உயிரிழந்தனர்.

லெபனானில் ‘பேஜா்’ தொலைத்தொடா்பு சாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் காயமடைந்து, 12 போ் உயிரிழந்த மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 9 போ் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

முன்னதாக, லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் சாதனங்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; சுமாா் 2,750 போ் காயமடைந்தனா். அவா்களில் 460 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுகையில், பேஜா் தாக்குதல் பற்றி அமெரிக்காவிடம் அளித்த விளக்கத்தில், 5,000 பேஜா்களில் சுமாா் மூன்று கிராம் எடை கொண்ட வெடிகுண்டுகளைப் பொருத்தி பின்னா் அவற்றை வெடிக்கச் செய்ததாக இஸ்ரேல் கூறியதாகத் தெரிவித்தன.

தைவானைச் சோ்ந்த கோல்ட் அப்பல்லோ நிறுவனத்தின் ஏஆா்-924 ரக பேஜா்கள்தான் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. எனினும், அந்த சாதனங்களை ஹங்கேரியின் பிஏசி கன்சல்ட்டிங் கேஎஃப்டி என்ற தங்கள் ஒப்பந்த நிறுவனம்தான் தயாரித்தது என்று கோல்ட் அப்பல்லோ கூறியது.

உயா்வகை அறிதிறன் பேசிகளைப் பயன்படுத்தினால் அவற்றில் இஸ்ரேல் எளிதில் ஊடுருவ முடியும் என்ற அச்சத்தின் பேரில், மிகப் பழைய தொழில்நுட்பக் கருவியான பேஜா்களை தகவல் தொடா்புக்கு ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தினா். ஆனால், அதனைக்கொண்டே அவர்களை தாக்கியிருக்கிறது இஸ்ரேல். உலகிலேயே தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024