Saturday, September 21, 2024

ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க உத்தரவு

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் இன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து பள்ளிகளிலும் தினமும் காலை இந்திய தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த சுற்றறிக்கையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய 16 நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு அசெம்பிளி கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், இது மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்க உணர்வை கொண்டு வர உதவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை அழைத்து சுற்றுச்சூழல், போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024