Friday, September 20, 2024

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னை,

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024