ஆஸி.யின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆடம் ஸாம்பா..! மிட்செல் மார்ஷ் புகழாரம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

டி20 தொடரில் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இன்று நடைபெறவிருக்கும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலிய அணி டிரெண்ட் பிரிட்ஜில் மோதுகிறது.

இந்தப் போட்டியில் ஆஸி.யின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தனது 100ஆவது ஒருநாள் போட்டியினை விளையாடவிருக்கிறார்.

இது குறித்து ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:

124 மீட்டருக்கு சிக்ஸர்! சிபிஎல் தொடரில் அதிரடி! (விடியோ)

ஒருநாள் போட்டியின் ‘கோட்’ ஆடம் ஸாம்பா

இந்தக் காலத்தில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனை. ஸாம்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை மேலும் கீழுமாக இருந்துள்ளது. இருப்பினும் அதையெல்லாம் தாண்டி கடந்த 4,5 வருடங்களாக அவரது வளர்ச்சி மிகவும் மெச்சத்தக்கதாக இருக்கிறது.

ஒரு நபராக ஸாம்பாவின் ஆளுமையும் முக்கியமாக அணியில் அவரது பங்களிப்புக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களது அணியின் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக முன்னேறி வருகிறார்.

50 ஓவர் போட்டிகளில் அணிக்கு முக்கியமான நேரங்களில் பந்துவீச அவரிடம்தான் செல்கிறோம். இந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லை. கடந்த சில வருடங்களாக இந்தச் சவாலை ஸாம்பா சிறப்பாக ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்து தலைசிறந்த வீரர்களும் செய்யும் மிகப்பெரிய கணத்தை உருவாக்கும் வீரராக எங்களுக்கு ஸாம்பாவே இருக்கிறார்.

அழுத்தமான நேரங்களில் அவரது பந்துவீச்சுக்கு மதிப்பளித்தே ஆக வேண்டும்.

அசத்தும் இளம் வங்கதேச வீரர் ஹசன் மஹ்முத்தின் வரலாறு!

100ஆவது போட்டியில் ஆடம் ஸாம்பா

ஆடம் ஸாம்பா, இதுவரை விளையாடிய 99 ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 2022இல் 5/35 எடுத்ததே சிறப்பான ஆட்டமாக இருக்கிறது.

92 டி20யில் 111 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். டி20 தரவரிசையில் 6ஆவது (662) இடத்தில் இருக்கிறார். 1 புள்ளி வித்தியாசத்தில் ஹசரங்கா (663) 5ஆவது இடத்தில் இருக்கிறார்.

முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடியுள்ள ஆடம் ஸாம்பா டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024