வீடுகளுக்கு பார்சல் மழை.. குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது: குடியிருப்பு நிர்வாகம் கிடுக்கிப்பிடி

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

புது தில்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் எண்ணற்ற பார்சல்கள் வந்துகொண்டே இருப்பது குறித்து, குடியிருப்பு நிர்வாகம் வீடுகளுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, ஒரு நாளில், ஒன்று அல்லது இரண்டு என பார்சல் வருவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். அல்லது, குடியிருப்பில் உங்களுக்கு என தனித்தனி பாதுகாவலர்களை நியமித்துக்கொள்ளுங்கள் என்று தனித்தனியான அனைத்து வீடுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது.

குடியிருப்பின் காவலாளி, ஒரு நாளில் பல முறை, பல வீடுகளுக்கு பார்சல்கள் வந்துகொண்டேயிருப்பதால், காவல்பணியை செய்ய முடியவில்லை என்று குடியிருப்பு நிர்வாகத்துக்கு அளித்த புகாரினைத் தொடர்ந்த இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அரிதாகிவிட்ட நட்புசூழ் உலகு: இருந்தால் இழந்துவிடாதீர்!!

இது தொடர்பாக குடியிருப்பு நிர்வாகம் அனுப்பிய கடிதம், சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதில், குடியிருப்பில் உள்ள மக்கள், ஒரு நாளைக்கு தங்கள் வீட்டுக்கு வரும் பார்சல்களின் எண்ணிகைகைய ஒன்று அல்லது இரண்டு என்ற அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் வீட்டுக்கு வரும் பார்சல்களை பெற்றுக்கொள்ள தனியாக பாதுகாவலரை நியமித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு குடியிருப்பில் உள்ளவர்களுக்கு எண்ணற்ற பார்சல்கள் வருவதால் பணி பாதிக்கப்படுவதாகவும் வரப்போவது பண்டிகைக் காலம் என்பதால் இது அதிகரிக்கும் எனவும் காவலாளி அளித்த புகாரை ஏற்று, நிர்வாகம் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

அதில், பார்சலை வாங்கி வைப்பதென்றால் பரவாயில், ஒரு பார்சல் வந்தால், அவர்களை தொடர்புகொண்டு ஓடிபி பெற்று விநியோகிப்பாளரிடம் கொடுத்து உரிய பொருளை பெற்று, அதனை உரியவரிடம் சேப்பிக்க வேண்டும். ஆனால், இதுவே நாளடைவில் அதிகரித்து, மிகப்பெரிய வேலைப்பளுவை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்கள் தங்கியிருக்கும் ஒரு சில குடியிருப்புக்கு ஒரு நாளைக்கு 10 – 15 பார்சல்கள் வருகின்றன. எனவே, இதனைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் தனியாக காவலாளி நியமித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த கடிதத்தில்.

இதற்கு பலரும் பல்வேறு கருத்துகளையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024