இலங்கை அதிபா் தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கொழும்பு: இலங்கையின் 9 ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (செப். 21) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2022 இல் அதன் மோசமான பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு நடைபெறும் முதல் அதிபர் தேர்தல் இது.

தோ்தலில் தமிழர்கள் 40 லட்சம் பேர் உள்பட 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் பணிகளில் 2,00,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 63,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமை(செப்.22) பிற்பகலுக்குள் புதிய அதிபர் யார் என தெரியவரும் என கூறப்படுகிறது.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்ட பரிந்துரைகளில் குறைபாடு: முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் குரேஷி

இந்தத் தோ்தலைப் பாா்வையிடுவதற்காக ஐரோப்பிய யூனியன், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச தோ்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சோ்ந்த 116 பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்தனா். அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து 78 பிரதிநிதிகளும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து 22 பிரதிநிதிகளும், ஆசியான் தோ்தல் கண்காணிப்பு அமைப்பிலிருந்து 9 பிரதிநிகளும் வந்துள்ளனா்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க எடுத்த முயற்சிகளின் வெற்றியின் மீது சவாரி செய்வதாக பல நிபுணர்கள் பாராட்டினர். முக்கோண தேர்தல் போரில் சுயேட்சையாக போட்டியிடும் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜேவிபி கட்சித் தலைவா் அருண குமார திஸ்நாயக ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024