அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் கனமழை!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சென்னை, செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் சுட்டெரித்தது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

கனமழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 26 வரை மழை

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது.

You may also like

© RajTamil Network – 2024