ஈவுத்தொகை, வட்டியை செலுத்த மின்னணு முறையில் மட்டுமே அனுமதி: செபி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுதில்லி: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ஈவுத்தொகை மற்றும் வட்டி உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு பணம் செலுத்தும் செயல் முறைகளை ஒழுங்குபடுத்துவதையும், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு, வசதி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செபியின் 'எல்ஓடிஆர்' விதிகளின் படி மின்னணு முறையில் மட்டுமே பணத்தை செலுத்த அனுமதிக்கப்படும். குறிப்பாக ரூ.1,500 க்கும் அதிகமான தொகைகளுக்கு மின்னணு பரிமாற்றங்கள் தோல்வியுற்றால் காசோலைகள் அனுமதிக்கப்படுகின்றன.

ஒருவேளை முதலீட்டாளர்களின் வங்கி விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அல்லது பணப் பரிவர்த்தனை தோல்வியுற்றால் நிறுவனங்கள் காசோலைகளை அனுப்ப வேண்டும்.

சமீபத்திய தரவுகளின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாப் 200 நிறுவனங்களில் உள்ள முதலீட்டாளர்களின் வங்கி கணக்கு மின்னணு முறையில் ஈவுத்தொகை செலுத்திய போது 1.29 சதவிகிதம் தோல்வியடைந்தது என்று செபி தெரிவித்துள்ளது.

முதல் முறையாக 84 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்; உச்சத்தில் நிஃப்டி!

சுமூகமான முறையில் ஈவுத்தொகை பறிமாற்றம் செய்ய முதலீட்டாளர்கள் தங்கள் வங்கி விவரங்களை வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் புதுப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்த திட்டம் குறித்து அக்டோபர் 11 ஆம் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை செபி வரவேற்றுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024