சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்… சாதனை படைத்த பும்ரா

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது இந்திய வீரராக பும்ரா சாதனை படைத்துள்ளார்.

சென்னை,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், வங்காளதேசத்தின் முதல் இன்னிங்சின் போது பும்ரா 4 விக்கெட் வீழ்த்தியன் மூலம் அவரது விக்கெட் எண்ணிக்கை (சர்வதேச கிரிக்கெட்டில்) 401 ஆக உயர்ந்தது. இதன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் விவரம்;

அனில் கும்ப்ளே – 953 விக்கெட்

ரவிச்சந்திரன் அஸ்வின் – 744 விக்கெட்

ஹர்பஜன் சிங் – 707 விக்கெட்

கபில்தேவ் – 687 விக்கெட்

ஜாகீர் கான் – 597 விக்கெட்

ரவீந்திர ஜடேஜா – 570 விக்கெட்

ஜவஹல் ஸ்ரீநாத் – 551 விக்கெட்

முகமது ஷமி – 448 விக்கெட்

இஷாந்த் சர்மா – 434 விக்கெட்

ஜஸ்ப்ரீத் பும்ரா – 401* விக்கெட்

You may also like

© RajTamil Network – 2024