Saturday, September 21, 2024

1996 சம்பவம்.. இஸ்ரேலுக்கு ‘தண்ணி காட்டிய’ என்ஜினியர்! செல்ஃபோனில் 50 கிராம் ஆர்டிஎக்ஸ்!!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

யாஹ்யா அய்யாஷ் என்ற ஹமாஸ் அமைப்பின் பயங்ரவாதி, வெடிகுண்டுகளை தயாரிப்பதில் வல்லவராக விளங்கியவரை, இஸ்ரேல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே செல்போனில் வெடிகுண்டை நிரப்பிவெடிக்க வைத்துக் கொன்றுள்ளது.

1996ஆம் ஆண்டு என்ஜினியர் என்று அறியப்படும் யாஹ்யா அய்யாஷ், உண்மையிலோய என்ஜினியர்தான். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்த பொறியியல் பட்டதாரி. இஸ்ரேலின் கெடுபிடியால், வெடிபொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்தபோதும், வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே அதாவது, சோப்புத் தூள் போன்றவற்றைப் பயன்படுத்திய மிகப் பயங்கர வெடிகுண்டுகளைத்த யாரித்து சாத்தானின் தாய் என பெயரெடுத்தவர்.

இதையும் படிக்க.. தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல்.. ஃபோன் மூலம் பயங்கரவாதியைக் கொன்ற 1996 சம்பவம்!!

எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது, 1992ஆம் ஆண்டு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் தோல்வியில் முடியும்வரை. 12 கிலோ பெட்ரோல் டேங்குகள் நிரப்பப்பட்ட இடத்தில், மூன்று தற்கொலைப் படை வீரர்கள் டெட்டனேட்டர்களுடன் காவல்துறையினரை நோக்கி ஓடியபோது அது வெடிக்க மறுத்துவிட்டது. அந்த மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் என்ஜினியரின் அடையாளம் இஸ்ரேலுக்குக் கிடைத்தது.

இஸ்ரேலின் தேடுதல் பணியால் காஸாவுக்கு நகர்ந்தார் யாஹ்யா. தங்குமிடத்துக்காக 1995ஆம் ஆண்டு தனது பல்கலை நண்பர் ஒசாமா ஹமாதை தொடர்புகொண்டார். மற்ற ஜிஹாதிகளைப் போல் அல்லாமல், யாஹ்யா குடும்பஸ்தர். திருமணமாகி, மகனுக்கு தந்தையானவர்.

மனைவியும், மகனும் காஸாவுக்குள் பத்திரமாக தஞ்சமடைய வைத்தவர், சற்றுத் தொலைவில் ஒரு வீட்டில் வசித்துவந்தபடி வெடிகுண்டுகளை தயாரித்து வந்தார். மிகுந்த எச்சரிக்கையுடனே இருப்பார் எப்போதுமே. புர்கா அணிந்துகொண்டு திடீரென மனைவியைப் பார்க்கச் செல்வார். யாருக்குமே இது தெரியாது. ஒரே ஒரு குறை. அவரது சொந்த ஊர், அங்கிருக்கும் பெற்றோரை நினைத்து வருந்தினார். இதுதான் அவரது பலவீனமாகவும் ஆனது.

இதையும் படிக்க.. இனி உங்கள் வீட்டிலும் பாக்கெட்டிலும்கூட குண்டு வெடிக்கலாம்! அதிபயங்கர போரின் அடுத்த உத்தி!

தனது நண்பர் வீட்டிலிருக்கும் தொலைபேசி வாயிலாகவே தந்தையுடன் பேசுவார். சில நாள்கள் அது வேலை செய்யாமல் போனது. அப்போது, தனது தந்தைக்கு ஒரு தொலைபேசி எண்ணை அனுப்பினார், 050507497தான் அது.

பணிகள் முடித்து வீட்டுக்கு வந்தவர், மோட்டரோலா போனை தேடினார். அது கிடைக்கவில்லை. உறங்கிவிட்டார், அங்கிருந்த சற்று தொலைவில்தான் இஸ்ரேல் படைகள் பல ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தன. தலைக்குமேல் சிறு விமானம் பறந்துகொண்டிருந்தது.

அரைத்தூக்கத்தில்தான், தனக்கு அருகில், இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான ஷின் பெய்ட்டால், வெடிகுண்டு உள்நுழைக்கப்பட்டிருந்த செல்போனைப் பார்க்கிறார்.

சிறிய ரேடியோ-கன்ட்ரோல்டு வெடிகுண்டு அதற்குள் இருந்ததை, வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றிருந்த பொறியாளர் யாஹ்யா அறிந்திருக்கவில்லை. அதற்குள் 50 கிராம் அர்டிஎக்ஸ் பயங்கர சப்தத்துடன் வெளியே வரக் காத்துக்கொண்டிருந்தது.

எப்படி இவ்வளவு பெரிய பயங்கரவாதியின் செல்போனுக்குள் வெடிகுண்டு சென்றது. இந்த வேலைக்கான தூண்டிலில் சிக்கியவர் ஒசாமா ஹமாத்தின் உறவினர் கமல் ஹமாத். இவர்தான் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த மோட்டரோலா செல்போனை அவசரத் தேவைக்காக என்று கூறி வாங்கி வந்து அதில் வெடிபொருளை நிரப்பிக்கொடுத்தார்.

இந்த பயங்கர சம்பவத்துக்குப் பின் கமல் ஹமாத் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்கு அப்போதே இந்த வேலைக்காக ரூ.3.55 கோடி கொடுக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு விசா கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காலை எழுந்ததும், அய்யாஷ் கையில் ஒசாமா இந்த மோட்டரோலாவைக் கொடுக்கிறார். தந்தை உன்னைத் தொடர்புகொண்டார் என்று. உடனே அய்யாஷ் போன் செய்கிறார் தந்தைக்கு. இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அப்போது அய்யாஷ் தனது தந்தையிடம் அப்பா எப்படியிருக்கிறீர்கள் என்கிறார். அவ்வளவுதான். செல்போன் வெடிக்கிறது, இஸ்ரேலின் ஒசாமா பின்லேடன் என அழைக்கப்பட்ட யாஹ்யா கொல்லப்படுகிறார்.

அந்த செல்போனை காதருவில் வைத்திருந்த அந்த மனிதனின் வலது பக்கத்தை முழுவதும் சிதைத்துச்சென்றிருந்தது 50 கிராம் ஆர்டிஎக்ஸ். தாடை, மண்டை ஓடுகளை துளைத்துவிட்டிருந்தது. காது இருந்த இடத்தில் சில சிதறிய தசைகள் இருந்தன. வெடிகுண்டுகளை தயாரிக்கும் மூளைக்காரனின் மூளைக்குள், வெடிகுண்டு துகள்கள் நுழைந்து தன் கூர்மையால், மூளைக்கூர்மையுடன் போட்டி போட முடியுமா என ஆராய்ந்துகொண்டிருந்தன.

அய்யாஷின் வலதுபக்க முகம் முற்றிலும் சிதைந்துவிட்டிருந்தது. ஆனால், செல்போனைப் பிடித்திருந்த வலது கைக்கு எதுவுமே ஆகவில்லை. அது பத்திரமாக அப்படியே இருந்தது.

இந்தப் படுகொலை வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. அது அவர் கொல்லப்பட்ட முறையால் மட்டுமல்ல, அவராலும் கூட. பாலஸ்தீனிய மக்களுக்கு, யாஹ்யாவின் கை ஒரு அடையாளச் சின்னமானது. அந்த நாளிலிருந்து ஒரு ஆண்டு முழுக்க இஸ்ரேல் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியதாகியது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024