Saturday, September 21, 2024

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஹேக் செய்யப்பட்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்வது வழக்கம்.

இதையும் படிக்க: இந்து மதச் சடங்குகள் பற்றி அறியாதவர் ஜெகன்மோகன்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தும் விடியோக்கள் இடம்பெற்றன. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தின் சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அந்த யூடியூப் பக்கம் முடக்கப்படுவதாகவும் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: தில்லி முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார் அதிஷி!

அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யூடியூப் பக்கத்தின் நேரலை இன்று மீண்டும் தனது வழக்கமான சேவைகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024