இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு; விரைவில் வாக்கு எண்ணிக்கை!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கொழும்பு: இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நிறைவு பெற்றது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் உள்பட இதுவரை இல்லாத அளவில், அதுவும் அதிபருக்கான தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்காக 13,421 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அமைதியான முறையில் நிறைவு பெற்றது.

வாக்காளர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள்தான் என்ற போதும், போட்டியிட்ட 38 பேரில் ஒருவர் கூட பெண் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற தேர்தலில் எங்கும் எந்த வன்முறையும் இன்றி நடைபெற்று முடிந்ததாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல்.. ஃபோன் மூலம் பயங்கரவாதியைக் கொன்ற 1996 சம்பவம்!!

ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற ஒரு சில மணி நேரங்களில் அதாவது மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 அல்லது 3 மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று கொழும்பு நகர தேர்தல் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், ஒரே ஒருவருக்கு வாக்களிப்பதற்கு மாறாக, தரவரிசையில் தேர்வு செய்யும் முறை உள்ளது. அதாவது ஒரு வாக்காளர், தாங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது என வரிசைப்படுத்தி வாக்களிக்கலாம்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பெறுவோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பிறகு, வெளியேற்றப்பட்டவர்களுக்கு கிடைத்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது யாருக்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்களோ, அதன் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படவிருக்கிறார்.

You may also like

© RajTamil Network – 2024