2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹார்டி, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

லீட்ஸ்,

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மேத்யூ ஷார்ட் – டிராவிஸ் ஹெட் ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் தலா 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. மிட்செல் மார்ஷ் 60 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 74 ரன்கள் அடித்து அணி கவுரமான நிலையை எட்ட உதவினார்.முடிவில் வெறும் 44.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.இதனையடுத்து 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது .

இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 12 ரன்களும் , வில் ஜேக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஹார்ரி புரூக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேமி ஸ்மித் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன் எடுத்தார். பென் டக்கெட் 32 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹார்டி, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024