நடுவரால் தப்பித்தேன்.. இல்லையெனில் அந்த ஓவரில் 7 சிக்சர்கள் பறந்திருக்கும் – நினைவுகளை பகிர்ந்த பிராட்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

2007 டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் விளாசினார்.

லண்டன்,

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளையும் சிக்சர்களாக விளாசி அசத்தியிருந்தார்.

அவரது அந்த அதிரடியான சிக்சர்கள் இன்றளவும் பெருமளவில் ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் அந்த சம்பவம் குறித்து ஏற்கனவே யுவராஜ் சிங் தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து அன்று நடைபெற்ற சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டூவர்ட் பிராட்டும் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "17 ஆண்டுகளாக நான் அந்த போட்டியை மீண்டும் எந்த ஒரு வீடியோவிலும் பார்த்தது கிடையாது. இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு யுவராஜ் சிங் அந்த ஒரு ஓவரில் எனது பந்துவீச்சை சிதைத்து விட்டார். அதிலும் குறிப்பாக அந்த ஓவரில் ஒரு பந்தை நான் நோபாலாக வீசியிருந்தேன். ஆனால் நடுவர் அப்போது அந்த பந்திற்கு நோபால் கொடுக்காதது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இல்லையென்றால் அந்தப் பந்தும் சிக்சராக மாறி ஏழு சிக்சர்களை யுவராஜ் சிங் விளாசியிருப்பார். நல்ல வேலையாக நான் அதிலிருந்து தப்பித்து விட்டேன்" என்று கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024