மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்த அஸ்ஸாம் காவல்துறையினர் இது தொடர்பாக 2 கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளனர்.

மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மணிப்பூரில் இருந்து கடந்த வெள்ளி (செப் 20) இரவில் லகிபூர் காவல்துறைக்குற்பட்ட பான்ஸ்கந்தி பகுதியில் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் டிரக் ஒன்றை காவலர்கள் மறித்துள்ளனர்.

அதில், நடத்தப்பட்ட தீவிர சோதனையில் டிரக்கின் 2 அறைகளில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,000 போதை மாத்திரைகள், 2 கிலோ கிரிஸ்டலின் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தப் போதைப் பொருள்கள் மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்டு அஸ்ஸாம் வழியாக நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட இருந்ததாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில், அஸ்ஸாமைச் சேர்ந்த சூரஜ் சேத்ரி (25) மற்றும் மோங்கல்ஜித் ராஜ்குமார் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தண்டவாளத்தில் சிலிண்டர்… தொடரும் ரயில் கவிழ்ப்பு முயற்சி!

"காசர் போலீஸார் வெற்றிகரமாக போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நம்பகமான தகவலின் அடிப்படையில், காசர் போலீசார் பான்ஸ்கந்தியில் ஒரு லாரியை தடுத்து நிறுத்தி, முழுமையான சோதனைக்குப் பிறகு ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மீட்டுள்ளனர். சுமார் 18,000 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கிரிஸ்டலின் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா காவல்துறையினரை பாராட்டியுள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் மாவட்டத்தில் ரூ. 40 கோடி அளவிலான 4 லட்சம் மெத்தபெட்டமைன் மாத்திரைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மிசோரம் போலீஸார் பறிமுதல் செய்த 24 நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா? ஆர்வம் காட்டாத இந்திய ஒலிம்பிக் சங்கம்!

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே பிரபலமான, கடுமையாக போதைக்கு அடிமையாக்கும் மெத்தபெட்டமைன் மாத்திரைகள், பார்ட்டி மாத்திரைகள் என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்டு இந்தியாவின் முழுக்கவும் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024