Monday, September 23, 2024

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். திவ்யா, வந்திகா, ஹரிகா, தானியா மற்றும் அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் , செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம். பி.ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை ஓபன் பிரிவில் வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் குறிப்பிடத்தக்க திறமை, சிறந்த உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்துள்ளன.நீங்கள் அனைவரும் சிறப்பாக தொடர வாழ்த்துகிறேன். உங்களின் பொன்னான வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம். மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள் .உங்கள் புத்திசாலித்தனம், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன. இந்தியாவின் மகள்கள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் மற்றும்.இந்தியாவிற்கு ஒரு உண்மையான வரலாற்று நாள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024