தவறு நடந்துவிட்டது: திருப்பதி சமையல் கூடத்தைப் புனிதப்படுத்தும் பூஜைகள்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

தவறு நடந்துவிட்டது: திருப்பதி சமையல் கூடத்தைப் புனிதப்படுத்தும் பூஜைகள்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது உறுதியான நிலையில், திருப்பதி சமையல் கூடத்தைப் புனிதப்படுத்தும் பூஜைகள் நடந்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

திருப்பதி திருமலையில், லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது, ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து, இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தார்.

இதையும் படிக்க.. தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல்.. ஃபோன் மூலம் பயங்கரவாதியைக் கொன்ற 1996 சம்பவம்!!

இந்த நிலையில், திருப்பதி லட்டில், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பொருள்களும் கலக்கப்பட்டிருந்தது பேசுபொருளான நிலையில், திருப்பதி சமையல் கூடத்தை புனிதப்படுத்தும் பூஜைகள் இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

சமையல் கூடத்தில், மகாசாந்தி யாகம் முறைப்படி நடத்தப்பட்டு, சமையல் கூடம் திருப்பதி தேவஸ்தான முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சுவாமிக்குப் படைக்கப்படும் பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு, தவறு நடந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தானமும் கூறியிருந்த நிலையல், இந்த யாகம் நடத்தப்பட்டுளள்து.

ஓரிடத்தை சுத்தப்படுத்தி புனிதப்படுத்தும் வகையில் நடத்தப்படும் யாகமே மகாசாந்தி யாகம். நடந்த தவறை சரி செய்து, கோவிலை புனிதப்படுத்தும் வகையில் இந்த மகாசாந்தி யாகம் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க.. இனி உங்கள் வீட்டிலும் பாக்கெட்டிலும்கூட குண்டு வெடிக்கலாம்! அதிபயங்கர போரின் அடுத்த உத்தி!

எட்டு அர்ச்சகர்கள், மூன்று ஆகம விதியை அறிந்த தலைமை அர்ச்சகர்கள் இந்த பூஜையை செய்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் இதரன வாரிய அதிகாரிகளும் இந்த பூஜையில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024