புதிய சாதனை! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை!!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வாரத்தின் முதல் நாளான இன்று(செப்.23) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,651.15 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 84,980.53 என்ற புள்ளிகளைத் தொட்டது. இறுதியில் 384.30 புள்ளிகள் உயர்ந்து 84,928.61 புள்ளிகளில் முடிவுற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,872.55 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 148.10 புள்ளிகள் அதிகரித்து 25,939.05 என்ற புள்ளிகளில் முடிந்தது.

இதையும் படிக்க | பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

கடந்த வாரமே சென்செக்ஸ் 84 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இன்று 85 ஆயிரத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோன்று நிஃப்டியும் முதல்முறையாக 25,900 புள்ளிகளைக் கடந்துள்ளது.

மொத்தமாக 2,274 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 1,661 பங்குகள் விலை குறைந்துள்ளன. 118 பங்குகள் விலையில் மாற்றமில்லை.

எம் & எம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக ஏற்றம் கண்டுள்ளன.

அதேநேரத்தில் ஈச்சர் மோட்டார்ஸ், டிவிஸ் லேப்ஸ், ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா, இண்டஸ்இன்ட் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் விலை கடுமையாகக் குறைந்தன.

You may also like

© RajTamil Network – 2024